search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் தாக்கப்பட்ட வைரல் புகைப்படம்
    X
    பெண் தாக்கப்பட்ட வைரல் புகைப்படம்

    ஃபேஸ்புக் வைரல் புகைப்படத்தின் சுவாரஸ்ய உண்மை பின்னணி

    ஃபேஸ்புக்கில் சர்ச்சை தலைப்பை கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதன் உண்மை பின்னணியை பார்ப்போம்.



    சாலையில் ரத்தம் சிந்தும் பெண் ஒரு காவல் துறை அதிகாரிகள் அருகில் நிற்கும் இரண்டு புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படத்தில் இருக்கும் பெண் காவல் துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

    ஜூன் 25 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருக்கும் இரு புகைப்படங்களில் 'மோடி-யோகி பேட்டி பச்சோவை பாருங்கள். நம் மகள்களை காவல் துறையினர் இப்படி கொடுமைப்படுத்துவதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள்? காவல் துறையினர் தான் மகள்களை கொடூரமாக தாக்குகின்றனர்' எனும் தலைப்பிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவினை பலர் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இரு புகைப்படங்களில் ஒரு படத்தில், இரண்டு காவல் துறை அதிகாரிகள் பெண்ணின் அருகில் நிற்பதும், மற்றொரு புகைப்படத்தில் மூன்று காவல் துறை அதிகாரிகள் அவரின் பின் நிற்கின்றனர். இரு புகைப்படங்களிலும் அந்த பெண்ணின் அருகில் சிறுமி அழுது கொண்டு நிற்கிறார்.

    வைரல் புகைப்படங்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள புகைப்படங்கள் ரிவர்ஸ் சர்ச் செய்யப்பட்டது. இதில் புகைப்படங்கள் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனுடன் இந்த புகைப்படங்களுடன் தொடர்பு கொண்ட செய்திகள் டிசம்பர் 22, 2016 இல் வெளியாகி இருக்கின்றன.

    பெண் தாக்கப்பட்ட புகைப்படம் வைரல் ஃபேஸ்புக் பதிவு

    அவற்றில் இரண்டு ஆண்கள் கூட்ட நெரிசல் மிக்க சந்தையில் பெண்ணை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் மெயின்புரி பகுதியில் அரங்கேறி இருக்கிறது. இதில் இரண்டு குழந்தைகளின் தாய் குடும்ப பிரச்சனை காரணமாக தாக்கப்பட்டிருக்கிறார். இதே செய்தியை பல்வேறு நிறுவனங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

    அந்த வகையில் காவல் துறை அதிகாரிகள் பெண்ணை தாக்குவதாக வைரலாகும் பதிவுகளில் உண்மையில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. உண்மையில் அந்த பெண் இரு ஆண்களால் தாக்கப்பட்டிருக்கிறார். அந்த பெண்ணை தாக்கியவர்களை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. போலி செய்திகளால் உயிரிழப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே போலி செய்தி பரவியதால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர்.
    Next Story
    ×