search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை பங்குச்சந்தை
    X
    மும்பை பங்குச்சந்தை

    பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே பங்குச்சந்தைகள் எழுச்சி- சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது

    பாராளுமன்றத்தில் இன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பங்குச்சந்தைகளில் காலையிலேயே வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பின்னர் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் குறித்து மக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்பதால், முதலீட்டாளர்கள் பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளன. பொருளாதார மந்தநிலையை மாற்றி புத்துயிர் அளிப்பதற்கான கொள்கைகளும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த எதிர்பார்ப்புகள் இன்று பங்குச்சந்தைகளில் எதிரொலித்தன.

    இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை முதலே வர்த்தகம் விறுவிறுப்பாக காணப்பட்டன. மும்பை பங்குச்சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சென்செக்ஸ் ஏறுமுகமாக சென்றது. 9.30 மணியளவில் 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆனது. ஜூன் 11-ம் தேதிக்கு பிறகு முதல் முறையாக இந்த நிலையை எட்டியது.

    அதன்பின்னர் சற்று சரிந்தாலும், முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்குவதில் ஆர்வமாக இருந்தனர். இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிப்டி, 11970 புள்ளிகளாக உயர்ந்தது. 10 மணி நிலவரப்படி நிப்டி 11962 என்ற அளவில் இருந்தது.
    Next Story
    ×