search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டார்ட் அப் -மாதிரிப்படம்
    X
    ஸ்டார்ட் அப் -மாதிரிப்படம்

    ஸ்டார்ட் அப் தொழிலில் இந்திய அளவில் தமிழகத்தின் இடம்?

    ஸ்டார்ட் அப் எனும் புதிய தொழில் தொடங்குவதில் இந்திய அளவில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது என்பதை பார்ப்போம்.
    புது டெல்லி:

    கல்லூரி பயிலும் இளைஞர்களிடமும், படிப்பை முடித்து நீண்ட காலமாக வேலைகாக காத்திருப்பவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஸ்டார்ட் அப் எனும் புதிய தொழில் முறை கொண்டு வரப்பட்டது.

    அவரவர் திறமை என்னவோ அதற்கு ஏற்றார்போல புதிய தொழில் தொடங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சரியான வழிநடத்தல் இன்றி சில தொழில்கள் முடங்கியும் உள்ளன.

    குறிப்பாக இந்தியாவில், பொறியியல் பட்டதாரிகள் பலரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப தொழில் செய்வதில் முனைப்புடன் இருக்கின்றனர். ஆனாலும், அதை எடுத்து செய்வதற்கு போதிய பணம் கிடைப்பதில்லை.

    ஸ்டார்ட் அப் யோசனைக்கான மாதிரிப்படம்

    இதன் காரணமாக வெகு சிலரே ஸ்டார்ட் அப் முறையில் தொழில் செய்து வருகின்றனர். இதனை நிருபிக்கும் விதமாக இந்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளி விவரம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

    இதில் முதல் மூன்று இடங்களை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. அடுத்தப்படியாக உத்தரபிரதேசம் ,தெலுங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. ஸ்டார்ட் அப் தமிழகத்தில் நலிவடைந்ததே இதற்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளது. கடைசி மூன்று இடங்களை உஜராத், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.





    Next Story
    ×