search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய்
    X
    மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய்

    நாடு முழுவதும் லாட்டரிகளை தடை செய்யும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்

    லாட்டரியை முற்றிலும், அதாவது நாடு முழுவதும் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் அனைத்து வகை லாட்டரிகளையும் தடை செய்யும் திட்டம் உள்ளதா? என பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார்.

    அதில் அவர் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் அசாம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மட்டுமே லாட்டரி விற்பனை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. லாட்டரியை முற்றிலும், அதாவது நாடு முழுவதும் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. யூனியன் பிரதேசங்களில் லாட்டரி விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை’ எனறு தெரிவித்தார்.

    லாட்டரி வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை ஏஜெண்டுகளிடம் இருந்து கடந்த 2016-17-ம் ஆண்டில் மட்டும் ரூ.260 கோடி சேவை வரி வசூலிக்கப்பட்டதாகவும் நித்யானந்த் ராய் தனது பதிலில் குறிப்பிட்டு இருந்தார்.

    Next Story
    ×