search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க் ஆண்ட்ரூ சார்லஸ்
    X
    மார்க் ஆண்ட்ரூ சார்லஸ்

    ஐஐடி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவனின் உருக்கமான டைரிக் குறிப்பு

    தெலுங்கானாவில் உள்ள ஐஐடி கல்லூரியில் மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் தற்கொலை பற்றி டைரியில் குறிப்பு ஒன்றை உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.
    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் உள்ள ஐஐடி கல்லூரியில் பயில்பவர் மார்க் ஆண்ட்ரூ சார்லஸ்(20). விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர், கடந்த திங்கட்கிழமை  நண்பர்களுடன் பேசிவிட்டு அன்றிரவு  11 மணியளவில் தன்னுடைய ரூமிற்கு சென்றுள்ளார்.

    மறுநாள் பிற்பகல் வரை சார்லஸ் ரூமை விட்டு வெளியே வரவில்லை. எனவே, நண்பர்கள் அவரது ரூமிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது சார்லஸ் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர்.  இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

    சார்லஸ், உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. பின்னர் அவரது  பெற்றோருக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டது. சார்லஸ் தூக்கிட்டுக் கொண்ட ரூமை போலீசார் சோதனை செய்தனர்.

    மாதிரிப்படம்

    அப்போது சார்லசின் டைரியில் அவரே கைப்பட எழுதிய குறிப்பை கண்டறிந்தனர். அந்த டைரிக் குறிப்பில், ‘என் வாழ்க்கை இப்படி முடியும் என்று நான் நினைக்கவில்லை.  நான் பிரிந்துவிட்டேன் என யாரும் நினைக்க வேண்டாம்.

    நான் எதற்கும் பயன்படாதவனாக உணர்கிறேன். நண்பர்கள் எனக்கு அதிக அன்பை வழங்கினர். அவர்களுக்கு திருப்பித்தர அன்பு ஒன்றுதான் உகந்தது. என் பெற்றோருக்கு நன்றி. என்னை மன்னித்துவிடுங்கள். நான் எதற்கும் பயன்படாதவனாகிவிட்டேன்' என்று உருக்கமாக கூறியுள்ளார்.

    கவலை மற்றும் மனசோர்வு காரணமாக சார்லஸ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சார்லசின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×