search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நுஸ்ரத் ஜஹான்
    X
    நுஸ்ரத் ஜஹான்

    இஸ்கான் ரதயாத்திரையில் பங்கேற்க சர்ச்சையில் சிக்கிய முஸ்லிம் பெண் எம்.பி.க்கு அழைப்பு

    கொல்கத்தா நகரில் நடைபெறும் ரதயாத்திரையில் பங்கேற்க வருமாறு சர்ச்சையில் சிக்கிய பிரபலநடிகையும், திரிணாமுல் கட்சி முஸ்லிம் பெண் எம்.பி. நுஸ்ரத் ஜஹானுக்கு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
    கொல்கத்தா:

    வங்காள நடிகை நஸ்ரத் ஜஹான் (29), பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். கடந்த மாதம் அவருக்கும், தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் திருமணம் நடைபெற்றது. கடந்த 25-ம் தேதி, பதவி ஏற்பதற்காக நஸ்ரத் பாராளுமன்றத்துக்கு வந்தார். முஸ்லிம் பெண்ணான அவர், குங்குமம் வைத்திருந்ததுடன், தாலி அணிந்திருந்தார்.

    பதவிப்பிரமாண உறுதிமொழியை வாசித்து முடித்தவுடன், ‘வந்தே மாதரம்’ என்று கூறினார். அவரது செயலுக்கு எதிராக இஸ்லாமிய மத குருக்கள், ‘மதக்கட்டளை’ பிறப்பித்துள்ளனர். அவரது செயல் இஸ்லாமுக்கு விரோதமானது என்று ஜாமியா மதகுரு முப்தி ஆசாத் கசாமி தெரிவித்தார்.

    இஸ்கான் ரத்யாத்திரை

    ஆனால், அதற்கு நஸ்ரத் பதிலடி கொடுத்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், சாதி, இன, மத எல்லைகளை கடந்த இந்தியாவின் பிரதிநிதி நான். இப்போதும் முஸ்லிமாகவே இருக்கிறேன். ஆனால், நான் எதை அணியவேண்டும் என்று யாரும் கருத்து கூறக்கூடாது. மத நம்பிக்கை என்பது ஆடைக்கு அப்பாற்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், இஸ்கான் அமைப்பு சார்பில் நடைபெறும் ரத யாத்திரையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள நுஸ்ரத் ஜஹான் எம்.பி.க்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    இஸ்கான் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ரத யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு 48வது ரத யாத்திரை நாளை மறுதினம் நடைபெறுகிறது. இந்த யாத்திரையை முதல் மந்திரி மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×