search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதீஷ் சந்திர மிஸ்ரா
    X
    சதீஷ் சந்திர மிஸ்ரா

    ஓபிசி சாதிகளை எஸ்சி பட்டியலில் சேர்த்தது அரசியலமைப்புக்கு விரோதமானது- பகுஜன் சமாஜ் கட்சி

    ஓபிசி பட்டியலில் உள்ள 17 சாதியினரை எஸ்சி பட்டியலில் சேர்த்தது அரசியலமைப்புக்கு விரோதமானது என பாராளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓபிசி) உள்ள 17 சாதிகளை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் (எஸ்சி) சேர்த்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட 17 சாதியினருக்கும் எஸ்சி என்ற பெயரில் சாதிச்சான்றிதழ் வழங்கும்படி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஆணையர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

    பாராளுமன்றம்

    யோகி ஆதித்யநாத் அரசின் இந்த நடவடிக்கைக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை பாராளுமன்றத்திலும் எழுப்பியது. மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்திர மிஸ்ரா இந்த பிரச்சனையை எழுப்பி பேசியதாவது:-

    இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் உள்ள 17 சாதியினரை தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பட்டியலில் சேர்த்தது அரசியலமைப்புக்கு விரோதமானது. அரசியலமைப்பு சட்டவிதி 341 பிரிவு 2-ன்படி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மாற்றம் செய்வதற்கு பாராளுமன்றத்திற்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது. ஜனாதிபதிக்கு கூட அந்த அதிகாரம் கிடையாது.

    எனவே, எஸ்.சி. பட்டியலில் எந்த மாற்றமும் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமும் இல்லாத நிலையில், இந்த 17 சாதியினரும் ஓபிசி வகுப்பினருக்கான நன்மைகளையும் பெற முடியாது, எஸ்.சி. வகுப்பினருக்கான நன்மையையும் பெற முடியாது.

    இந்த 17 சாதிகளையும் எஸ்சி பட்டியலில் சேர்ப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்க தயாராக உள்ளது.  ஆனால், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி, எஸ்சி ஒதுக்கீட்டை விகிதாசார அடிப்படையில் அதிகரித்தபிறகே ஆதரவு அளிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×