search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தொண்டர்கள் உண்ணாவிரதம்
    X
    காங்கிரஸ் தொண்டர்கள் உண்ணாவிரதம்

    ராகுல் காந்தி ராஜினாமா முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி தொண்டர்கள் உண்ணாவிரதம்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியானதையடுத்து, இந்த முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி அக்கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

    இதனையடுத்து ராகுல் காந்தியும் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியானது.  அதன் பின்னர் நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் மீண்டும் தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார் என செய்திகள் வெளியானது. ராகுல் இப்படி முடிவெடுத்திருந்தால், உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தின் வாசலில் அக்கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.



    ராஜினாமா குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகளை சந்திக்க உள்ளார்.

    ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், மத்திய பிரதேசம் முதல் மந்திரி கமல்நாத், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், சத்தீஸ்கர் முதல் மந்திரி  பூபேஷ் பாகல், புதுச்சேரி முதல் மந்திரி  நாராயண சாமி ஆகியோரை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×