search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனையில் சிசிச்சை பெறும் குழந்தைகள்
    X
    மருத்துவமனையில் சிசிச்சை பெறும் குழந்தைகள்

    பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 133 ஆக உயர்வு

    பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது.
     
    இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்காளக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது. இதைத் தொடர்ந்து மத்திய நிபுணர் குழு பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. முசாபர்பூர் நகரில் உள்ள மருத்துவமனையில் 112 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 21 பேரும் உயிரிழந்து உள்ளனர், இதனால் பலி எண்ணிக்கை இன்று 133 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் பல குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×