search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய கல்விக் கொள்கை வரைவு- பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு
    X

    தேசிய கல்விக் கொள்கை வரைவு- பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

    தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமர்ப்பித்த தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவித்திருந்தது. இதற்கான அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

    இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களைவியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்தார். அப்போது, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும் என்றும், ஜூலை 31-ம் தேதி வரை கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் கூறினார்.

    அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசனை செய்தபிறகே, தேசிய கல்விக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரமேஷ் பொக்ரியால், ‘2009ம் ஆண்டில் இருந்தே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது, ஆனால், 2014க்கு பிறகுதான் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது’ என்றார்.
    Next Story
    ×