search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு தானே ஓட்டு போட்டீர்கள் அவரிடமே வேலை கேளுங்கள்- குமாரசாமி ஆவேசம்
    X

    மோடிக்கு தானே ஓட்டு போட்டீர்கள் அவரிடமே வேலை கேளுங்கள்- குமாரசாமி ஆவேசம்

    பிரதமர் மோடிக்கு தானே ஓட்டு போட்டீர்கள் அவரிடமே வேலை கேளுங்கள் என்று போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் முதல்-மந்திரி குமாரசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

    ரெய்ச்சூர்:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ‘கிராம தரிசனம்’ நிகழ்ச்சிகள் மூலம் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

    ரெய்ச்சூர் மாவட்டத்தில் கிராம தரிசனம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது ஏர்மருஸ் அனல்மின் நிலையம் மற்றும் ஹூட்டி தங்கச்சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் தங்களது கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக வந்தனர்.

    அவர்களை முதல்-மந்திரியிடம் நெருங்கவிடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆவேச மடைந்த தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து கோ‌ஷங்கள் எழுப்பியபடி முதல்-மந்திரியை முற்றுகையிட சென்றனர். உடனே போலீசார் பேரிகேட் வைத்து தொழிலாளர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதை தள்ளிக்கொண்டு செல்ல தொழிலாளர்கள் முயற்சித்தனர். அப்போது தொழிலாளர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். தொடர்ந்து தொழிலாளர்கள் கோ‌ஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த முதல்- மந்திரி குமாரசாமி ஆவேசமானார்.

    போராட்டம் நடத்திய தொழிலாளர்களைப் பார்த்து, ‘‘தேர்தலில் நீங்கள் மோடிக்கு வாக்களிக்கிறீர்கள், வேலையை மட்டும் என்னிடம் கேட்கிறீர்கள். இது என்ன நியாயம்? குறிப்பிட்ட நேரத்துக்குள் நான் கரேகுட்டே கிராமத்துக்கு செல்ல வேண்டும். பஸ்சுக்கு வழி விடுகிறீர்களா? இல்லை தடியடி நடத்த வேண்டுமா? என்று கோபமாக கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 30 நிமிட பரபரப்புக்கு பின்னர் கரேகுட்டே கிராமத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    ஏர்ரூஸ் அனல்மின் நிலைய பிரச்சினை தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகிகளுடன் ஏற்கனவே பேசிவிட்டேன். இந்த பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும். ஆனால் தொழிலாளர்கள் சாலையை மறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். தெருவில் நின்று நான் முடிவு செய்ய முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×