search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜினாமா முடிவில் மாற்றம் இல்லை - ராகுல் காந்தி உறுதி
    X

    ராஜினாமா முடிவில் மாற்றம் இல்லை - ராகுல் காந்தி உறுதி

    என்னுடைய ராஜினாமா முடிவில் மாற்றம் இல்லை. அந்த முடிவில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. அப்போது ராகுல் காந்தி ராஜிமானா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறியதுடன், ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    அப்போது பேசிய ராகுல் காந்தி, “நான் தற்போது தலைவர் பொறுப்பில் கிடையாது. என்னுடைய ராஜினாமா முடிவில் மாற்றம் இல்லை. அந்த முடிவில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன்” என உறுதிபட தெரிவித்தார்.
    Next Story
    ×