search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை
    X

    2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை

    2 குழந்தைகளுக்கு (உயிருடன் இருப்பவர்கள்) மேல் உள்ளவர்கள் உத்தரகாண்ட் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற புதிய மசோதா நிறைவேறியது.
    டேராடூன்:

    பா.ஜனதா ஆளும் உத்தரகாண்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அங்கு 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் புதிய மசோதா ஒன்று மாநில சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

    உத்தரகாண்ட் பஞ்சாயத்து ராஜ் (திருத்தம்) மசோதா-2019 என்ற இந்த மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன்படி 2 குழந்தைகளுக்கு (உயிருடன் இருப்பவர்கள்) மேல் உள்ளவர்கள் உத்தரகாண்ட் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது.

    இதைப்போல உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியையும் இந்த மசோதா வரையறுத்து உள்ளது. அதன்படி தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பெண்களும், தலித் பிரிவு ஆண்களும் 8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அதேநேரம் தலித் பிரிவு பெண்கள் 5-ம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது.

    சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மீது நேற்று விவாதம் நடப்பதாக இருந்தது. ஆனால் மாநில முதல்-மந்திரி நிதி பரிமாற்றம் தொடர்பாக பேசும் வீடியோ ஒன்று வெளியானது குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இந்த மசோதா மீது விவாதம் நடத்த முடியவில்லை.
    Next Story
    ×