search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரகடனம் செய்து 44-வது ஆண்டுகள் - அவசர நிலையை எதிர்த்த தலைவர்களை நினைவுகூர்ந்தார் மோடி
    X

    பிரகடனம் செய்து 44-வது ஆண்டுகள் - அவசர நிலையை எதிர்த்த தலைவர்களை நினைவுகூர்ந்தார் மோடி

    அவசர நிலையை கொண்டு வந்ததின் 44-வது ஆண்டு தினமான நேற்று, அவசர நிலையை எதிர்த்த தலைவர்களுக்கு பிரதமர் மோடி வணக்கம் செலுத்தி நினைவுகூர்ந்தார்.
    புதுடெல்லி:

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார். அவசர நிலை, இந்திய ஜனநாயகத்தின் கரும்புள்ளி என இன்று வரை வர்ணிக்கப்படுகிறது. அவசர நிலையின்போது, அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டன.

    அவசர நிலையை ஆவேசமாக எதிர்த்து போராடிய தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண்சிங், கிருபளானி, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அரசியல் கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டனர். அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் தணிக்கை செய்யப்பட்டன. அரசு ஊடகங்கள், அரசின் பிரசாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

    இந்த அவசர நிலை 1977-ம் ஆண்டு, மார்ச் மாதம் 21-ந் தேதி முடிவுக்கு வந்தது.

    அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதின் 44-வது ஆண்டு தினத்தையொட்டி, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு வெளியிட்டார்.

    அதில் அவர், “அவசர நிலையை கடுமையாகவும், அச்சமின்றியும் எதிர்த்த மாபெரும் தலைவர்களுக்கு இந்தியா வணக்கம் செலுத்துகிறது. ஒரு சர்வாதிகார மன நிலையை, இந்திய ஜனநாயக நெறிமுறைகள் வெற்றிகொண்டன” என குறிப்பிட்டுள்ளார்.

    பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷாவும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு லட்சக்கணக்கான தேச பக்தர்கள் கஷ்டப்பட்டார்கள். அந்த வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்” என கூறி உள்ளார்.

    பாரதீய ஜனதா கட்சியின் செயல்தலைவர் ஜே.பி. நட்டா, “அவசர நிலை காலம் ஒரு கரும்புள்ளி. 1975-ம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 25-ந் தேதி) காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைப்பதற்காக ஜனநாயக படுகொலை செய்தது. அவசர கால எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்திய பாரதீய ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் மாபெரும் ஹீரோக்களை நன்றியுள்ள இந்த நாடு நினைவுகூர்கிறது” என கூறி உள்ளார்.

    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், “அவசர நிலை, இந்திய வரலாற்றின் கருப்பு அத்தியாயம். இந்த நாளில் நமது அரசியல் அமைப்புகளையும், அரசியல் சாசனத்தையும் நிலை நிறுத்துவதற்கான முக்கியத்துவத்தை நாம் எப்போதும் நினைவு கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×