search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு
    X

    எம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் நோய்க்கு 130 பேர் உயிரிழந்தது தொடர்பான பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.கே.ராகேஷ் எழுப்பினார்.

    இதுபோன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் தொடர்பாக பதிலளிக்க மத்திய மந்திரிகள் முன்வராதது தொடர்பாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    இதை கவனித்த துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு ‘உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் 30 நாட்களுக்குள் பதிலளித்தாக வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

    சில முக்கிய பிரச்சனை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், சுற்றிவளைத்து நீண்ட நெடிய விளக்கங்கள் அளிப்பது, எதிர்வாதங்களில் ஈடுபடுவது போன்ற செயல்கள் ஏற்புடையதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×