search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை - பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்
    X

    மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை - பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்

    வாக்குச்சீட்டு முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பழைய நடைமுறையின்படி வாக்குச்சீட்டு முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

    தற்கால நடைமுறைகளுக்கு இந்த முறை சாத்தியப்படாது என தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.

    வாக்கு எண்ணிக்கையின்போது குறைந்தபட்சம் 50 சதவீதம் வாக்குச்சாவடிகளில் வி.வி.பாட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



    இந்நிலையில், வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயருக்கு நேராக முத்திரை பதிக்கும் முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்னர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×