search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் மோடி சந்திப்பு
    X

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் மோடி சந்திப்பு

    ஜப்பானில் ஜி-20 உச்சி மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். அப்போது இரு தரப்பு வர்த்தக பிரச்சினைகளை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் வரும் 28-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் நமது நாட்டின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

    இந்த மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

    அப்போது இந்தியாவை அமெரிக்கா வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து விலக்கிய விவகாரம், இரு தரப்பு வரி விதிப்பு பிரச்சினை, விசா விவகாரம், இரு தரப்பு ராணுவ, அரசியல் உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வரும் 25-ந் தேதி இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது. அவரது வருகையின் போது மோடி, டிரம்ப் சந்திப்பின்போது பேச விரும்பும் அம்சங்கள் பற்றி இறுதி செய்யப்படும்.
    Next Story
    ×