search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட் தயாரிப்பு மும்முரம் - நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
    X

    பட்ஜெட் தயாரிப்பு மும்முரம் - நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    மத்திய நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து டெல்லியில் பிரபல நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்துள்ளர்து. இந்த அரசில் மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பின்னர் முதல் நிதி நிலை அறிக்கையை ஜூலை மாதம் 5-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

    இந்நிலையில், மத்திய நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து டெல்லியில் பிரபல நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தினார்.



    ’பொருளாதார கொள்கையில் முன்னேற்றப் பாதை’ என்னும் தலைப்பில் நிதி ஆயோக் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட நிதித்துறை நிபுணர்கள் மற்றும் பிறதுறைகளை சேர்ந்த வல்லுனர்கள்  பங்கேற்றனர். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர்களின் கருத்துகளை மோடி கேட்டறிந்தார்.

    வேலைவாய்ப்பு, வேளாண்மை, நீர்வள மேலாண்மை, ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக அந்த துறைகளை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளுக்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
    Next Story
    ×