search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமேதி தொகுதி மக்களுடன் ஸ்மிரிதி இரானி சந்திப்பு
    X

    அமேதி தொகுதி மக்களுடன் ஸ்மிரிதி இரானி சந்திப்பு

    உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்துடன் சென்று மக்களை சந்தித்தார்.
    அமேதி:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஸ்மிரிதி இரானி களமிறங்கினார்.

    இதில் காங்கிரஸ் தலைவர் ராகுலை விட 55,120 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்மிரிதி இரானி வெற்றிப் பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,67,598 ஆகும்.

    இதனையடுத்து ஸ்மிரிதி இரானி, ‘அமேதிக்கு புதிய விடியல் பிறந்துள்ளது. இந்த வெற்றி புதிய உறுதியை அளிக்கிறது. அமேதி மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமேதியை நான் மிகவும் மதிக்கிறேன்’ என கூறியிருந்தார்.



    இந்நிலையில் இன்று அமேதி தொகுதிக்கு கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்துடன் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மக்களை நேரில் காண சென்றார்.

    அங்கு மறைந்த கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தத்தெடுத்த கிராமங்களுக்கு சென்றபோது மக்கள் அளித்த மனுக்களை ஸ்மிரிதி பெற்றுக் கொண்டார்.

    இதையடுத்து இருவரும் கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட பாராவுலி கிராம தலைவர் சுரேந்திர சிங்கின் குடும்பத்தினரை காண உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×