search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பனிக்கட்டியாக உறைந்த கேதர்நாத் ஏரி
    X

    6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பனிக்கட்டியாக உறைந்த கேதர்நாத் ஏரி

    2013-ம் ஆண்டு உருவானது போல் தற்போதும் கேதர்நாத் கோவில் அருகே இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரி பனிக்கட்டியால் உறைந்து வருகிறது.
    டேராடூன்:

    2013-ம் ஆண்டு வட இந்தியாவில் வெள்ள பேரழிவு ஏற்பட்டது. உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 5,748 பேர் பலியானார்கள். 4,500 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமானது.

    உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் அருகே உள்ள ஏரியில் பனிக்கட்டி உறைந்து ஏற்பட்ட வெடிப்பால் இந்த வெள்ள பேரழிவு ஏற்பட்டது.

    2013-ம் ஆண்டு உருவானது போல் தற்போதும் கேதர்நாத் கோவில் அருகே இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரி பனிக்கட்டியால் உறைந்து வருகிறது.

    இதனால் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ள அபாயம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

    டேராடூனில் உள்ள வாடியா இன்ஸ்டிடியூட் அமைப்பு பனிக்கட்டி உறைந்த சில படங்களை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் அடுத்த வாரம் அந்த இடத்தை சென்று பார்வையிடுகிறார்கள். இதை கேதர்நாத் பகுதியில் உள்ள ருத்ராபிரயாக் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    அதே நேரம் தற்போது கேதர்நாத் ஏரியில் உருவாகி இருக்கும் பனிக்கட்டி உறைவால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மற்றொரு நிபுணர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×