search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபைக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரும் -தேவேகவுடா
    X

    கர்நாடக சட்டசபைக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரும் -தேவேகவுடா

    கர்நாடகா மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளதாக முன்னாள் பிரதமரான தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி நடந்து வருகிறது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல்
    ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி தனியாக தேர்தல் களத்தை சந்தித்திருந்தால் கர்நாடகத்தில் வெற்றிப் பெற்றிருக்கும்’ என கூறினார்.

    இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவேகவுடா செய்தியாளர்களுக்கு கூறியதாவது:



    கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இப்போது நடந்து கொள்வதைப் பாருங்கள். எங்கள் ஆட்களும் விவரமானவர்கள்தான்.

    இரு கட்சிகளின் தலைவர்களும் கூறி வரும் கருத்துக்கள் என்னை காயப்படுத்தியுள்ளது. இது குறித்து ராகுல் காந்தியிடமும் கூறியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதற்கிடையில் இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்னர் தேவேகவுடா, ‘நான் சட்டசபை தேர்தல் குறித்து பேசவில்லை. உள்ளாட்சி தேர்தல் குறித்தே பேசினேன்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

     



     
    Next Story
    ×