search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தை குறைக்க யோகா உதவும்- ராகுல் மீது பாஜக தாக்கு
    X

    சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தை குறைக்க யோகா உதவும்- ராகுல் மீது பாஜக தாக்கு

    சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தை குறைக்க யோகா உதவும் என ராகுல்காந்தியை பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் மறைமுகமாக சாடியுள்ளார்.
    திருவனந்தபுரம்: 

    சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கலந்துகொண்டார்.  



    அப்போது அவர் பேசியதாவது:-

    வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது கவனிப்பது கடினம். அதேபோல் தேர்வின்போது பாடப்புத்தகத்தின் மீது கவனம் செலுத்துவது கடினம். பள்ளிகளில் குழந்தைகள் இருப்பதைப்போல, பாராளுமன்றத்திலும் சிலர் உள்ளனர். 

    ஜனாதிபதி உரையாற்றுவதை கூட கவனிக்காமல் செல்போனில் கேம் விளையாடுகின்றனர். இததகைய சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தை குறைக்க யோகா உதவும் என அவர் கூறினார்.
    Next Story
    ×