search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய எம்.பி.பிரக்யா சிங்கின் மனு நிராகரிப்பு
    X

    விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய எம்.பி.பிரக்யா சிங்கின் மனு நிராகரிப்பு

    மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரிய பிரக்யாவின் மனுவை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

    வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து, விலக்களிக்க வேண்டும் என்ற பிரக்யா சிங்கின் கோரிக்கையை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் நிராகரித்தது. 



    வழக்கு விசாரணைக்காக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் முதன்முறையாக கடந்த 7-ம் தேதி ஆஜரானார். 11 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணைக்கு பிரக்யா சிங் இதுவரை ஒருமுறை மட்டுமே ஆஜராகியுள்ளார். 

    இதனிடையே, நீதிமன்றத்தில் வாரம் ஒருமுறை ஆஜராக விலக்கு கோரி பிரக்யா மனுதாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

    இந்நிலையில், வாரம் ஒருமுறை ஆஜராக விலக்களிக்க கோரிய பிரக்யாவின் மனுவை மும்பையில் உள்ள என்.ஐ.ஏ.நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
    Next Story
    ×