search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்: பிரதமர் மோடி
    X

    எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்: பிரதமர் மோடி

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 31-ந் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ந் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று 17-வது பாராளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடியது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த மோடி, பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    புதிய நம்பிக்கைகள், கனவுடன் இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. வலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம். எதிர்க்கட்சிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். மக்களவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் இந்த தேர்தல்தான் அதிகமான பெண் வாக்காளர்களையும், எம்.பி.க்களையும் கண்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எம்.பி.க்கள் செயல்பட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×