search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூளை காய்ச்சலில் குழந்தைகள் பலி - பீகார் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை மந்திரி நேரில் ஆய்வு
    X

    மூளை காய்ச்சலில் குழந்தைகள் பலி - பீகார் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை மந்திரி நேரில் ஆய்வு

    பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் இன்று முசாபர்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது.
     
    இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.



    இதற்கிடையே, முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள கிருஷ்ணா மருத்துவமனையிலும், கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் மொத்தம் 80 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பீகாரின் முசாபர்பூர் கிருஷ்ணா மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் இன்று நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
    Next Story
    ×