search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுடன் உத்தவ் தாக்கரே நாளை அயோத்தி பயணம்
    X

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுடன் உத்தவ் தாக்கரே நாளை அயோத்தி பயணம்

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நாளை அயோத்தி செல்கிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சியான சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது. 

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சியின் 18  எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை அயோத்திக்கு செல்கிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தலில் வைத்துள்ள ராமர் சிலையை வழிபட உள்ளார் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    உத்தவ் தாக்கரே மற்றும் அவருடன் வரும் எம்.பி.க்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும் என  மாநில அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×