search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே அதிகாரிகள் இடையிலான தகவலுக்கு புரியும் மொழியில் பேசலாம் - ரெயில்வே புதிய உத்தரவு
    X

    ரெயில்வே அதிகாரிகள் இடையிலான தகவலுக்கு புரியும் மொழியில் பேசலாம் - ரெயில்வே புதிய உத்தரவு

    ரெயில்வே அதிகாரிகள் இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு புரியும் மொழியில் பேசிக் கொள்ளலாம் என ரெயில்வே துறை உத்தரவில் திருத்தம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    தென்னக ரெயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலேயே பேசி தகவல்களை பரிமாற வேண்டும். தமிழில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    ரெயில்வேயின் இந்த அறிக்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, பா.ம.க. தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல்களில் பழைய நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் பழைய நடைமுறையே தொடரும் என தெரிவித்தார்.
    Next Story
    ×