என் மலர்

  செய்திகள்

  பா.ஜ.க. தேசிய தலைவராக அமித்ஷா தொடருவார் என அறிவிப்பு
  X

  பா.ஜ.க. தேசிய தலைவராக அமித்ஷா தொடருவார் என அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில பாஜக தலைவர்களும் பங்கேற்றார்கள். தமிழகம் சார்பில் தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்தது.

  அப்போது லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற அமித்ஷாவே காரணம் என்பதால் அவரே தலைவராக தொடர வேண்டும் என அனைத்து மாநில தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து அமித்ஷாவே தலைவராக இருக்க முடிவு எடுக்கப்பட்டது.

  Next Story
  ×