search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூன் 25-ந் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
    X

    ஜூன் 25-ந் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படாதது பற்றி ஆலோசிக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், ஜூன் 25-ந் தேதி டெல்லியில் கூடுகிறது.
    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.
     
    காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 3 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த மாதம் 28-ந் தேதி கூடியது. அந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய 9.19 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    இதனிடையே ஜூன் தொடக்கத்தில் தமிழகத்திற்கு 4.5 டிஎம்சி நீர் வர வேண்டிய நிலையில் 1 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.



    இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறக்கப்படாதது பற்றி ஆலோசிக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், ஜூன் 25-ந் தேதி கூடுகிறது. டெல்லியில் காவிரி ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகளுக்கு காவிரி ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

    ஜூலை மாதம் 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×