search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளம் - போராட்டத்தில்  ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் மீது தடியடி
    X

    மேற்கு வங்காளம் - போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் மீது தடியடி

    மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில், பா.ஜ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலை பகுதி அருகே உள்ள நயஓட்டில் ஜூன் 8-ம் தேதி பா.ஜ.க. - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பா.ஜ.க. தொண்டர்கள் சுகாந்தா மோன்டல், பிரதீப், ‌ஷங்கர் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழு நாள் கருப்பு தினமாக அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் கொல்கத்தாவில்  உள்ள லால்பசார் முதல் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வரை செல்லும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



    இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து காவல் துறை அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர்.

    இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியினை போலீசார் மேற்கொண்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    இதனால் போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பாய்ச்சியும் போராட்டகாரர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

    ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுக்கு மிகவும் மோசமாக உள்ளது என உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.    
    Next Story
    ×