என் மலர்

  செய்திகள்

  கேரளாவில் ஆம்புலன்ஸ் - மீன் லாரி மோதி விபத்து - 8 பேர் பலி
  X

  கேரளாவில் ஆம்புலன்ஸ் - மீன் லாரி மோதி விபத்து - 8 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலக்காடு அருகே மீன் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
  பாலக்காடு:

  கேரள மாநிலம் பத்தம்பி கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்ற கார் நல்லியம்பதி அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு அரசு பஸ் மூலம் நன்மாரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாலக்காடு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

  பாலக்காடு செல்லும் வழியில் எதிரே வந்த மீன் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த காயம் அடைந்தவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் டிரைவர் சுதீர் உள்பட 8 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

  இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
  Next Story
  ×