என் மலர்

  செய்திகள்

  புதிய கல்விக்கொள்கை: மாநில கல்வி அமைச்சர்களுடன் ஜூன் 22-ல் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆலோசனை
  X

  புதிய கல்விக்கொள்கை: மாநில கல்வி அமைச்சர்களுடன் ஜூன் 22-ல் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய கல்விக்கொள்கை குறித்து ஜூன் 22-ம் தேதி விவாதிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
  புதுடெல்லி:

  இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரைவு வரைவுக் கொள்கை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களுக்கு மும்மொழிக் கொள்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் புதிய வரைவுக் கொள்கையிலும் திருத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தில் தற்போது இருமொழிக் கொள்கை முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஜூன் 22-ம் தேதி விவாதிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை அமைச்சர்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

  புதிய வரைவு கல்விக்கொள்கையில் உள்ள அம்சங்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. 
  Next Story
  ×