என் மலர்

  செய்திகள்

  கர்நாடக வளர்ச்சிக்கு புதிய பாஜக எம்பிக்கள் பாடுபடுவார்கள்- சதானந்த கவுடா
  X

  கர்நாடக வளர்ச்சிக்கு புதிய பாஜக எம்பிக்கள் பாடுபடுவார்கள்- சதானந்த கவுடா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகாவில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பிக்கள் மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள் என மத்திய மந்திரி சதானந்த கவுடா உறுதி அளித்தார்.
  பெங்களூரு:

  பாராளுமன்றத் தேர்தலில், கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பிக்களுக்கு பெங்களூருவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மத்திய மந்திரி பிரகலாத் ஜோசி பாராளுமன்ற கூட்டத் தொடருக்கான தயாரிப்பு பணியில் பிசியாக இருப்பதால் அவர் மட்டும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. மற்ற அனைவரும் பங்கேற்றனர். அவர்களை மாநில பாஜக தலைவர் எடியூரப்பா மற்றும் மூத்த தலைவர்கள் பாராட்டி கவுரவித்தனர்.

  விழாவில், மத்திய மந்திரி சதானந்த கவுடா பேசுகையில், கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பிக்கள் அனைவரும், மாநில மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுத்து  பணியாற்ற கடமைப்பட்டுள்ளார்கள், என்றார்.

  “மாநில நலன் சார்ந்த எந்த பிரச்சனைகளில், மாநில அரசுடன் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இருக்காது. மாநில அரசுடன் நல்லுறவை பேணுவதுதான் பிரதான கொள்கையாக இருக்கும். மாநில அரசு ஒத்துழைத்தால், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

  பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு பெரும் வெற்றியை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டியது நமது கடமை. தலைநகர் டெல்லிக்கு வரும் தொண்டர்களுக்கு உதவி செய்வதற்காக டெல்லியில் ஒரு அலுவலகம் திறக்கப்போகிறோம். அங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை நாம் சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளோம்” என்றும் சதானந்த கவுடா பேசினார்.

  Next Story
  ×