என் மலர்

  செய்திகள்

  அமெரிக்காவிடம் இருந்து 24 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குகிறது
  X

  அமெரிக்காவிடம் இருந்து 24 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடற்படைக்கு அதிநவீன ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை அடுத்து முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து 24 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  பிரதமர் மோடி 2-வது முறையாக பதவி ஏற்றதை தொடர்ந்து பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

  குறிப்பாக கடற்படையை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  கடற்படைக்கு அதிநவீன ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து 24 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த ஹெலிகாப்டர்களை வாங்கினால் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு எதிரிகள் தாக்கும் ஏவுகணையை கண்காணிக்கவும் முடியும். இந்த பல்நோக்கு நவீன ஹெலிகாப்டர் இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் என்று கருதப்படுகிறது.

  24 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ரூ.17,500 கோடி செலவில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு செய்யப்படும் மிகப்பெரிய முதல் ஒப்பந்தம் இதுவாகதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஒப்பந்தம் செய்யப்பட்டதில் இருந்து 18 மாதங்களுக்குள் அனைத்து ஹெலிகாப்டர்களும் இந்தியாவுக்கு வந்து விடும். 2022-ம் ஆண்டுக்குள் கடற்படையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  இதற்கிடையே இந்தியாவிலும் நவீன போர் ஹெலிகாப்டர்கள் தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 111 கடற்படை பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கு வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×