என் மலர்

  செய்திகள்

  பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - மாநில முதல்வர்களுக்கு அழைப்பு
  X

  பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - மாநில முதல்வர்களுக்கு அழைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 15-ம் தேதி நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

  இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இது ஆகும். இக்கூட்டத்தில், மாநில அரசுகளின் கருத்துக்கள், கொள்கை முடிவுகள், வளர்ச்சித் திட்டங்கள், நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.
  Next Story
  ×