search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எர்ணாகுளம் இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானது -கேரள மந்திரி
    X

    எர்ணாகுளம் இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானது -கேரள மந்திரி

    கேரளாவில் எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இப்போது மீண்டும் அதுபோன்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞரின் ரத்த மாதிரிகள் புனே மற்றும் ஆலப்புழாவுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.



    இந்நிலையில், எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதியாகியது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதியாகியது. புனே பரிசோதனை மையத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்தி உள்ளது. நிபா வைரஸ் பாதிப்புகளை கவனிக்க தனி வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
    Next Story
    ×