என் மலர்

  செய்திகள்

  சைக்கிளில் வந்து மந்திரி பொறுப்பை ஏற்ற ஹர்ஷ் வர்தன் - டெல்லியில் சுவாரஸ்யம்
  X

  சைக்கிளில் வந்து மந்திரி பொறுப்பை ஏற்ற ஹர்ஷ் வர்தன் - டெல்லியில் சுவாரஸ்யம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தனது வீட்டில் இருந்து இன்று சைக்கிளில் வந்து அலுவலகப் பணிகளை கவனிக்க தொடங்கினார்.
  புது டெல்லி:

  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 30-ம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த மந்திரிசபையில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக ஹர்ஷ் வர்தன் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில், பதவியேற்ற பின்னர் முதல்முறையாக தனது பணிகளை கவனிக்கச் செல்வதற்கு தயாரான ஹர்ஷ் வர்தன், வீட்டில் தயாராக நின்றிருந்த காரை புறக்கணித்துவிட்டு சைக்கிளில் ஏறி பரபரப்பான டெல்லி சாலை வழியாக வியர்க்க, விறுவிறுக்க அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.

  மத்திய சுகாதாரத்துறை அலுவலகத்தில் அவருக்கு உயரதிகாரிகள் மலர்செண்டுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
  Next Story
  ×