என் மலர்

  செய்திகள்

  வெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்
  X

  வெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் ஆயிரம் கிலோவுக்கு அதிகமான இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.
  சண்டிகர்:

  நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

  இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க., காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் போட்டியை அளிக்கின்றன.
   
  சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நாடு முழுவதும் பா.ஜ.க. 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வெளியானது பா.ஜ.க.வுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.  நாளை வெளியாகவுள்ள வாக்கு எண்ணிக்கையில் தாங்கள் ஆட்சியை கைப்பற்றி விடுவோம் என காங்கிரஸ் கட்சியும், சிரோன்மணி அகாலி தளம் கட்சியினரும் உற்சாகத்தில் உள்ளனர்.

  இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் ஆயிரம் கிலோ லட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நூற்றுக்கணக்கானோர் லட்டுக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  Next Story
  ×