என் மலர்

  செய்திகள்

  மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் வழங்கிய 4 ஊழியர்கள் இடைநீக்கம்
  X

  மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் வழங்கிய 4 ஊழியர்கள் இடைநீக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி ரெயில் நிலையத்தில் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் வழங்கிய 4 ஊழியர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். #RailwayTicket #Modi #EmployeesSuspended
  பாரபங்கி:

  உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி ரெயில் நிலையத்தில், கடந்த 14-ந்தேதி, பிரதமர் மோடி புகைப்படத்துடன், மத்திய அரசு வீட்டு வசதி திட்ட விளம்பரம் பொறிக்கப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட கூடுதல் கலெக்டர் சந்தீப் குமார் குப்தா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

  அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து 10 நாட்கள்வரை, பிரதமர் படத்துடன் கூடிய டிக்கெட்டுகளை வழங்கி வந்ததாக தெரியவந்தது. தவறுதலாக அந்த டிக்கெட் சுருள் பயன்படுத்தப்பட்டு விட்டதாக கூறி சமாளித்தனர். இருப்பினும், ரெயில்வே உயர் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, 4 ஊழியர்களை இடைநீக்கம் செய்தனர்.

  2 பேர், முன்பதிவு குமாஸ்தாக்கள் ஆவர். ஒருவர், தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர், இன்னொருவர் வணிக ஆய்வாளர் ஆவர்.

    #RailwayTicket #Modi #EmployeesSuspended
  Next Story
  ×