search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கும் - மம்தா ஆவேசம்
    X

    மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கும் - மம்தா ஆவேசம்

    மேற்கு வங்காளம் மாநிலம் கூச் பெகார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #MamataBanerjee #PMModi
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரசாரம் செய்து வருகிறார். 

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கூச்பேஹார் மாவட்டத்தில் உள்ள மாதாபங்காவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை சட்ட மசோதாவை அமல்படுத்த நாங்கள் விடமாட்டோம்.  நாட்டில் யார் வசிக்க வேண்டும், யார் வெளியேற வேண்டும் என்பதை மோடி உள்ளிட்ட யாரும் முடிவுசெய்ய முடியாது. 

    திருடு, கலவரம் செய், மக்களை கொல் ஆகிய மூன்று கோஷங்களை பிரதமர் மோடி எழுப்பி வருகிறார். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும். யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும் என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #MamataBanerjee #PMModi
    Next Story
    ×