என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக் உதவியால் 8 ஆண்டுகளுக்கு பின் தாயிடம் சேர்ந்த மகன்
Byமாலை மலர்4 April 2019 3:32 AM GMT (Updated: 4 April 2019 3:32 AM GMT)
தெலுங்கானாவில் 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்டார். #Facebook #MissingBoyFound
ரசகொண்டா:
பேஸ்புக் 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு ஆகும். இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு பேஸ்புக்கில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர்.
அளவுகடந்த மகிழ்ச்சியுடன், உடனடியாக ரசகொண்டா பகுதியில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு இது குறித்து தெரியப்படுத்தினார். அங்குள்ள போலீசார் அந்த பேஸ்புக் கணக்கின் ஐபி எண்ணை கொண்டு தினேஷ் , பஞ்சாப்பின் அம்ரித்சார் மாவட்டத்தில் உள்ள ரனகலா கிராமத்தில் வசிப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் ஒரு குழுவாக பஞ்சாப் சென்று, தினேஷை மீட்டு நேற்று தாயிடம் ஒப்படைத்தனர். #Facebook #MissingBoyFound

பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்பதை எளிதாக அறியலாம்.
அந்த வகையில் தெலுங்கானாவில் கடந்த 2011ம் ஆண்டு 8 வயதான தனது மகன் தினேஷ் ஜனா காணாமல் போனதாக தாய் சுசானா குஷாய்குடா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். ஆனால், எந்த பயனும் இல்லை. தினேஷ், காணாமல் போய் 8 ஆண்டுகள் ஆன நிலையில், சுசானா தனது பேஸ்புக் கணக்கில் தினேஷ் ஜனா, தினேஷ் ஜனா லிமா எனும் பெயர்களைக் கொண்டு தேடியுள்ளார். அப்போது அவரது மகனின் புகைப்படத்தை பார்த்தார்.
அளவுகடந்த மகிழ்ச்சியுடன், உடனடியாக ரசகொண்டா பகுதியில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு இது குறித்து தெரியப்படுத்தினார். அங்குள்ள போலீசார் அந்த பேஸ்புக் கணக்கின் ஐபி எண்ணை கொண்டு தினேஷ் , பஞ்சாப்பின் அம்ரித்சார் மாவட்டத்தில் உள்ள ரனகலா கிராமத்தில் வசிப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் ஒரு குழுவாக பஞ்சாப் சென்று, தினேஷை மீட்டு நேற்று தாயிடம் ஒப்படைத்தனர். #Facebook #MissingBoyFound
Next Story
×