என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருணாசல பிரதேச முதல்-மந்திரி வாகன அணிவகுப்பு காரில் ரூ.1.80 கோடி பறிமுதலா?
Byமாலை மலர்4 April 2019 12:54 AM GMT (Updated: 4 April 2019 12:54 AM GMT)
அருணாசல பிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி பெமா காண்டுவின் வாகன அணிவகுப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பா.ஜனதா மீது காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
அருணாசல பிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி பெமா காண்டுவின் வாகன அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு காரில் இருந்து ரூ.1.80 கோடியை தேர்தல் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பறிமுதல் செய்ததாகவும், அதை தேர்தல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் எண்ணுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவுவதாகவும் காங்கிரஸ் கட்சி நேற்று குற்றம் சாட்டியது.
இந்த வீடியோக்களை செய்தியாளர்களிடம் காட்டிய அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இது தொடர்பாக பிரதமர் மோடி, பெமா காண்டு மற்றும் துணை முதல்-மந்திரி சவ்னா மெயின் ஆகியோர் மீது தேர்தல் கமிஷன் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அத்துடன் அருணாசல் மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான மாநில பா.ஜனதா தலைவர் தபிர் கவோவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அருணாசல பிரதேசத்தில் நேற்று காலையில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த பணம் வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைக்கப்பட்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத தேர்தல் கமிஷனுக்கும் கண்டனம் தெரிவித்தார்.

Next Story
×