என் மலர்

  செய்திகள்

  தேர்தல் தோல்வியில் இருந்து பாஜக பாடம் கற்கவில்லை - சிவசேனா கடும் தாக்கு
  X

  தேர்தல் தோல்வியில் இருந்து பாஜக பாடம் கற்கவில்லை - சிவசேனா கடும் தாக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தல் தோல்வியில் இருந்து பாஜக பாடம் கற்கவில்லை என்று சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது. #ShivSena

  மும்பை:

  மத்தியிலும், மராட்டிய மாநிலத்திலும் சிவசேனா கட்சி பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது.

  ஆனால், பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் சமீப காலமாக சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது.

  கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படாமல் அதன் உறுப்பினர்கள் சபையை புறக்கணித்தனர்.

  அந்த விவகாரத்தின் போது, ராகுல்காந்தி அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து பேசியதை சிவசேனா பாராட்டியது.

  இதன் பிறகும் பாரதிய ஜனதாவை சிவசேனா ஒவ்வொரு வி‌ஷயத்திலும் விமர்சித்து வருகிறது. 3 மாநிலத்தில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்ததற்கு மோடியே காரணம் என்றும் சிவசேனா கூறி இருந்தது.

  இந்த நிலையில் ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சிவசேனா பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

  2014 பாராளுமன்ற தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்று உறுதி அளித்தார்கள். அதனால்தான் ஆட்சிக்கும் வந்தார்கள்.


   

  ஆனால், ஆட்சி இப்போது முடிய போகும் நிலையில் இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஏராளமான வெற்று வாக்குறுதிகளை கொடுத்தது. அதேபோல்தான் ராமர் கோவில் கட்டுவோம் என்றும் வெற்று வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்.

  இப்போது தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே ஏன் ராமர் கோவில் கட்டவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதனால் ராமர் கோவில் பற்றி பாரதிய ஜனதா ஏதேதோ சொல்லி கொண்டு இருக்கிறது.

  மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறும்போது, நிதானமாக இருப்போம், சரியான நேரத்தில் எல்லாம் நடக்கும் என்று கூறுகிறார்.

  மத்திய மந்திரி நிதின் கட்காரி ராமர் கோவிலை அனைவருடைய ஒப்புதலோடும், ஒத்துழைப்போடும் கட்டுவோம் என்று கூறுகிறார்.

  எப்போது கோவில் கட்டப்போகிறீர்கள்? ராமர் கிட்டத்திட்ட 25 ஆண்டுகள் காத்து இருந்து விட்டார். நீங்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்தும் கட்ட முடியவில்லை.

  எவ்வளவு காலம்தான் கும்பகர்ண தூக்கத்தில் இருக்க போகிறீர்கள்? 3 மாநிலத்தில் தோல்வி அடைந்து இருக்கிறீர்கள். இதற்கு பிறகும் நீங்கள் பாடம் கற்கவில்லை.

  இதேநிலை நீடித்தால் பாராளுமன்ற தேர்தலிலும் அது தோல்வியை நோக்கி அழைத்து செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள்.

  ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் அவசர சட்டம் கொண்டு வரவில்லை. இதுபற்றி கேட்டால் இந்த வி‌ஷயத்துக்கு அவசர சட்டம் கொண்டு வர முடியாது என கூறுகிறீர்கள்.

  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பலர் சிக்கி உள்ள நிலையில் அந்த வழக்குகளை கூட அகற்றுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

  மூத்த தலைவர் அத்வானியை ஜனாதி பதியாகத்தான் உருவாக்க வில்லை. குறைந்த பட்சம் அவர் மீது உள்ள வழக்குகளையாவது நீக்குங்கள்.

  இவ்வாறு அதில் எழுதப்பட்டு உள்ளது. #ShivSena

  Next Story
  ×