search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல், மேகதாது விவகாரத்தை எழுப்பி எம்பிக்கள் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    X

    ரபேல், மேகதாது விவகாரத்தை எழுப்பி எம்பிக்கள் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    ரபேல் மற்றும் மேகதாது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #ParliamentStalled
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநிலங்களவையில் அலுவல்கள் முற்றிலும் முடங்கி உள்ளன.

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. இன்றும் ரபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்களும், மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பினர். பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


    இதேபோல் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டார். ஆனால், உறுப்பினர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றும், அவையின் மையப்பகுதிக்கு வந்தும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். இதன்மூலம் மாநிலங்களவை 7-வது நாளாக முடங்கியது. #WinterSession #ParliamentStalled
    Next Story
    ×