என் மலர்

  செய்திகள்

  எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் முடங்கியது மக்களவை
  X

  எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் முடங்கியது மக்களவை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேகதாது விவகாரம், ரபேல் மற்றும் சீக்கிய கலவர வழக்குகளின் தீர்ப்பைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இன்று மக்களவை பணிகள் முடங்கின. #WinterSession #LokSabhaAdjourned
  புதுடெல்லி:

  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

  இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவை கூடியதும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.

  இதேபோல் ரபேல் வழக்கின் தீர்ப்பு மற்றும் சீக்கிய கலவர வழக்கின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

  இதுஒருபுறமிருக்க, பாஜக எம்பிக்கள் எழுந்து நின்று காங்கிரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ரபேல் விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

  இதுபோன்ற காரணங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.  12 மணிக்கு அவை கூடியபோதும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. எனவே, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். நாளை காலை 11 மணிக்கு மக்களவை மீண்டும் கூடுகிறது. #WinterSession #LokSabhaAdjourned
  Next Story
  ×