search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டர்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் - ராஜஸ்தான் காங். தலைவர்கள் வேண்டுகோள்
    X

    தொண்டர்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் - ராஜஸ்தான் காங். தலைவர்கள் வேண்டுகோள்

    ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். இறுதியில் 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. 

    காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் தலைமையில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், புதிய முதல் மந்திரியை ராகுல் காந்தி தேர்வு செய்வார் என முடிவானது.

    இதற்கிடையே, காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் இன்று காலை டெல்லி சென்றனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அதன்பின்னர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தினர்.



    இதையடுத்து, ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான அசோக் கெலாட் ஆகியோர் தங்களது தொண்டர்களை அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    Next Story
    ×