என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணத்தில் மர்மம்- ஆன்மீக குரு பரபரப்பு புகார்
ஹரித்துவார்:
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி.அகர்வால். 87 வயதாகும் இவர் ஐ.ஐ.டி.யின் முன்னாள் பேராசிரியர் ஆவார்.
ஓய்வுபெற்ற பின்பு ஆன்மீகம் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலராக செயல் பட்டு வந்தார். மாசு அடைந்து வரும் கங்கையை பாதுகாக்க குரல் கொடுத்து வந்தார்.
கடந்த ஜூன் மாதம் அவர் கங்கையில் கட்டிடங்கள், அணைகள் கட்டப்பட்டு வருவதை தடுக்க கோரி ஹரித்துவாரில் உண்ணா விரதம் தொடங்கினார். 4 மாதம் தொடர்ந்து உண்ணா விரதம் இருந்த ஜி.டி.அகர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹரித்துவார் எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இப்போது அவரது உடலை ஒப்படைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அகர்வால் தனது மரணத்துக்கு பின்பு மருத்துவ ஆராய்ச்சிக்காக மருத்துவ கல்லூரிக்கு உடல்தானம் வழங்குவதாக உறுதி அளித்து இருந்தார். அதன்படி நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று ஹரித்துவார் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதற்கு அவரது ஆன்மீக குரு சுவாமி அவிமுக் தேஷ்வரானந்த் சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அகர்வால் உடலை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு வழங்க மாட்டோம். வேறொரு மருத்துவமனைக்கு தான் வழங்குவோம். உடலை எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்படைக்க மறுத்ததன் மூலம் அவரை திட்டமிட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கொன்றுவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், அகர்வால் உடலை 3-ம் நபரிடம் நாங்கள் ஒப்படைக்க மாட்டோம். அகர்வால் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு வழங்கியுள்ளார். அவரது நெருங்கிய உறவினர் கூட அகர்வாலின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என்றார். #GDAgarwal