search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் வங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை
    X

    டெல்லியில் வங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை

    டெல்லியில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள், அவரிடம் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.
    புதுடெல்லி :

    டெல்லியின் த்வாரகா பகுதியில் அமைந்துள்ள கார்பரேஷன் வங்கியில் கேஷியராக பணியாற்றி வருபவர் சந்தோஷ் குமார்(25). இவர் நேற்று மாலை பணி முடிந்து வங்கியை விட்டு வெளியே வந்த போது முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில், குண்டு தாக்கி ரத்த வெள்ளத்தில் தரையில் சந்தோஷ் குமார் தரையில் சரிந்தார். அப்போது அவரிடம் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளை அடித்து சென்றது. இதைத்தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் சந்தோஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

    இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வங்கி வாசலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். 
    Next Story
    ×