என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடி உடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சு
  X

  பிரதமர் மோடி உடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷியா நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. #VladimirPutin #SushmaSwaraj
  புதுடெல்லி:

  தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். ரஷ்ய அதிபர் புதினை அரசு மரியாதையுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.  இதனை அடுத்து, பிரதமரின் இல்லத்துக்கு வந்த புதினை மோடி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர்,  இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

  இந்த சந்திப்பில் இந்தியா ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. குறிப்பாக 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

  இந்திய பயணத்தை முடிக்கும் முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை புதின் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #VladimirPutin #SushmaSwaraj
  Next Story
  ×