search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடை விதிக்காததால் குற்றப்பின்னணி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் 1765 பேர் நிம்மதி பெருமூச்சு
    X

    தடை விதிக்காததால் குற்றப்பின்னணி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் 1765 பேர் நிம்மதி பெருமூச்சு

    குற்றப்பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் நிற்க தடையில்லை என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளதால் வழக்கு பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் நிம்மதி அடைத்துள்ளனர். #SupremeCourt #Lawmakers


    இந்தியா முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 4 ஆயிரத்து 896 பேர் உள்ளனர்.

    இவர்களில் 1765 பேர் கிரிமினல் குற்றப்பின்னணி உடையவர்கள் ஆவார்கள். அதாவது மொத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 36 சதவீதம் பேர் கிரிமினல் குற்ற வழக்குகளை எதிர் கொண்டுள்ளனர்.

    அவர்கள் மீதான கிரிமினல் குற்ற வழக்குகள் நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் நடந்து வருகின்றன. இந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது மொத்தம் 3,045 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இன்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்று இருந்தால் இந்த 1,765 பேரின் பதவி ஆட்டம் கண்டு இருக்கும். பதவி தப்பியதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் இருக்கும் எம்.எல். ஏ.க்களில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அங்கு மொத்தம் உள்ள 539 எம்.எல்.ஏ.க்களில் 248 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் இருக்கிறார்கள்.

    கிரிமினல் அரசியல்வாதிகளில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள 234 எம்.எல். ஏ.க்களில் 178 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    பீகாரில் 147 எம்.எல்.ஏ.க்களும், மேங்கு வங்கத்தில் 139 எம்.எல்.ஏ.க்களும், ஆந்திராவில் 132 எம்.எல்.ஏ.க்களும், கேரளா 84 எம்.எல்.ஏ.க்களும், கர்நாடகாவில் 82 எம்.எல். ஏ.க்களும் கிரிமினல் குற்ற வழக்குகளுடன் இருக்கிறார்கள்.

    எம்.பி.க்களில் 543 பேரில் 228 பேர் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு உள்ளனர். #SupremeCourt #Lawmakers

    Next Story
    ×